செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டொனால்டு டிரம்ப்உருவம் பொறித்த, ‘டாய்லெட் பேப்பருக்கு’ அமோக வரவேற்புடொனால்டு டிரம்ப்உருவம் பொறித்த, ‘டாய்லெட் பேப்பருக்கு’ அமோக வரவேற்பு

டொனால்டு டிரம்ப்உருவம் பொறித்த, ‘டாய்லெட் பேப்பருக்கு’ அமோக வரவேற்புடொனால்டு டிரம்ப்உருவம் பொறித்த, ‘டாய்லெட் பேப்பருக்கு’ அமோக வரவேற்பு

1 minutes read

அமெரிக்க வேலைவாய்ப்புகளை, சீனா பறிப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது உருவம் பொறித்த, ‘டாய்லெட் பேப்பருக்கு’ அமோக வரவேற்பு காணப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர், 8ல் நடக்கவுள்ளது. இதில், இரு கட்சிகளிலும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக பிரைமரி தேர்தல் தற்போது நடக்கிறது. குடியரசு கட்சியின் சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், உத்தேச வேட்பாளராக முன்னிலை பெற்று விட்டார். ஜனநாயக கட்சி சார்பில் அவரை எதிர்த்து நிற்க, ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
பிரசாரக் கூட்டங்களில் ஆதரவு திரட்டி வரும் டிரம்ப், ‘அமெரிக்க வேலைவாய்ப்பை, சீனா உள்ளிட்ட நாடுகள் பறித்து வருகிறது’ என, பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள், டிரம்ப் உருவம் பொறித்த டாய்லெட் பேப்பர்களை தயாரித்து வருகின்றன. டிரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த பேப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள ஆன்லைன் வர்த்தக
நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்கா விற்பனை நிறுவனங்கள், டிரம்ப் டாய்லெட் பேப்பரை வாங்க, ‘ஆர்டர்’ கொடுத்துள்ளன.
அமெரிக்காவில், 50 நிறுவனங்களிடம் இருந்து, ஆர்டர் வந்துள்ளதாக சீன வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின், டாய்லெட் பேப்பர்கள் விலை குறைவு என்பதால், அவை, ஏற்கனவே அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. இப்போது தேர்தல் சீசன் என்பதால், டிரம்ப் டாய்லெட் பேப்பர்கள் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது என, சீன வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.