2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடம் பிடித்தது. இப்பட்டியலில் இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்தது.
உலக பொருளாதார மற்றும் அமைதி நிறுவனம், ஆண்டுதோறும் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 2 மற்றும் 3வது இடங்கள் முறையே டென்மார்க்கும், ஆஸ்திரியாவும் பிடித்தன.
இப்பட்டியலில் ‛டாப் 100’ல் கூட இந்தியா இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு 141வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு(2014) இந்தியா 143வது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் பாக்., 153வது இடமும், ஆப்கன் 160வது இடமும், கடைசி இடமான 163வது இடத்தை சிரியாவும் பெற்றன. தெற்காசியாவில் சிறந்த இடத்தை பூடான் பிடித்தது. இப்பட்டிலில் பூடான் 13வது இடத்தில் உள்ளது.