செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | இலங்கைநிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | இலங்கை

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | இலங்கைநிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி | இலங்கை

1 minutes read

இலங்கை நிதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை படுதோல்வியடைந்தது.

இலங்கை நிதியமைச்சராக இருப்பவர் ரவி கருணாநாயகே. இவரது தவறான பொருளாதாரக் கொள்கையால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சரிந்து வரும் அந்நாட்டின் செலாவணி மதிப்பை உயர்த்த தவறிவிட்டதாகவும் கருணாநாயகே மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும், அவரை பதவியிலிருந்து நீக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்தனர். இதன் மீதான வாக்கெடுப்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஒலிப்பெருக்கி பழுதடைந்த காரணத்தால் வாக்கெடுப்பை நடத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொத்தம் 225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வெறும் 51 பேர் மட்டுமே வாக்களித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 145 பேர் வாக்களித்தனர். 28 பேர் அவைக்கு வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, 94 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது, எதிர்க்கட்சியினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.