கடுமையான தலைவலியுடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து, உயிருள்ள சிலந்தியை, டாக்டர்கள் அகற்றி உள்ளனர்.பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பகுதியில் வசிப்பவர் விக்டோரியா பிரைஸ்.
இவர் சவுத்வேல்ஸ் போலீசில், தொழில்நுட்ப பயிற்சியாளராக பணிபுரிகிறார். சமீபத்தில், நியூட்டன் கடற்கரைக்கு சென்ற விக்டோரியா, நீண்ட நேரம் நீந்தினார். வீடு திரும்பியதும் ஒரு முறை குளியல் போட்டார். அதன்பின், ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தார்.
சிறிது நேரத்தில் தலை வலிக்கத் துவங்கி, நேரம் செல்ல செல்ல கடுமையானது. மறுநாள் அலுவலகத்திற்கு சென்ற பின், தலைவலியுடன், காதுவலியும் ஏற்படவே, பயந்து போன விக்டோரியா, அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது காதில் உயிருள்ள சிலந்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நீண்ட நேரம் போராடி, அந்த சிலந்தியை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். அதன் பின், விக்டோரியாவின் காது வலியும், தலைவலியும் குறைந்தது. கடலில் நீண்ட நேரம் நீந்திய போது, காதில் சிலந்தி புகுந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.