ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் 2015ம் ஆண்டு வருமானம் ரூ.6700 கோடி என அமெரிக்க கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு தற்போது பணக்கார தீவிரவாத அமைப்பாக மாறி வருகிறது. இதன் ஒரு ஆண்டு வருமானம் ரூ.6700 கோடி என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்களை விற்பதன் மூலமும் இவை வருமானத்தை ஈட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பின் ஆண்டு வருமானம் ரூ.6700 கோடி என அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, மிரட்டி பணம் பறித்தல், வரி விதித்தல், உள்ளூர் நன்கொடைகள், பணத்திற்காக கடத்தல், வங்கி கொள்ளை போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் ஐஎஸ் அமைப்பு தனது வருமானத்தை ஈட்டிவருகிறது. இது தொடர்பாக கருவூல உதவி செயலர் டேனில் கிளாசியர் கூறுகையில், “ கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எண்ணெய் விற்பனை மூலம் ரூ.3350 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
மிரட்டல் நடவடிக்கைள், தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமா ஆண்டுக்கு ரூ.2345 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. கடத்தல் செயல்கள் மூலமாக ரூ.134 கோடி முதல் ரூ.300 கோடி கிடைத்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை மூலமாக ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பின் நிதி ஆதாரங்கள்அழிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த வருமானம் குறையும்” என்றார்.