வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்து உள்ளன. ஒரு வாரத்துக்கு முன் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்கவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் வங்காளதேச அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகள் 119 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், சமூக விரோதிகள் என கருதப்படும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.