பிரான்போர்ட்: ஜெர்மன் நாட்டில் உயரமான 61 மாடி கட்டிடத்தில் வேகமாக படிகளை கடக்கும் போட்டி நடைபெற்றது. பிரான்போர்ட் நகரில் நடந்த போட்டியில் 426 வீரர்கள் கலந்து கொண்டனர். சாம்பியன் ஷிப் கோப்பைக்கான இந்த போட்டியில் படிக்கட்டுகளில் வேகமாக ஏறுவதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதில் கிறிஸ்டியன் ரிடில் என்பவர் 61 மாடிகளையும் 6 நிமிடம் 25 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
போட்டியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்த போட்டிகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் சென்ற பியோட்டர் இந்த முறை 2-ம் இடம் பிடித்தார்.