செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்

சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்சர்வதேச யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டம்

1 minutes read

இரண்டாவது சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வெகு விமரிசையாகக் கொண்டாட அமெரிக்கா, பிரிட்டன் நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச யோகா தினம் இரண்டாவது ஆண்டாக வரும் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இந்த தினத்தை அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் சர்வதேச யோகா தினத்தன்று நடைபெற உள்ள யோகா தொடர்பான கருத்தரங்க நிகழ்ச்சியொன்றில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதனுடன் இணைந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், அமெரிக்க

பாடகி தன்யா வெல்ஸும், இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க முன்னாள் அழகி நோனா தவுலூரியும் பங்கேற்கிறார்கள்.

வாஷிங்டன் நகரில் நடன நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு, பரதநாட்டியம், கதக், குச்சுபுடி, மோகினி ஆட்டம் போன்ற இந்தியப் பாரம்பரிய நடனங்களை நடனக் கலைஞர்கள் ஆட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகிறது.

நியூயார்க், ஹூஸ்டன், சிகாகோ, அட்லாண்டா, சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். தேவாலயங்களிலும் யோகப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பிரிட்டனில் யோகா தினம்: லண்டன் நகரில் உள்ள டவர் பிரிட்ஜ், தேம்ஸ் நதி ஆகிய முக்கிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) முதல் சர்வதேச யோகா தினக் கொண்டாட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்தத் தகவல் அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.