செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்சிரியாவில் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்

1 minutes read

சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சிரியாவின் அல்-டான்ஃப் என்னும் பகுதியில், மிதவாதக் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியாவின் போர் விமானம் குண்டு வீசித் தாக்கியது.

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு வரும் அந்தக் கிளர்ச்சியாளர்களில் பலர், அமெரிக்காவின் ஆதரவு பெற்றவர்கள்.

கடந்த சில மாதங்களாக ரஷிய விமானங்கள் அந்தப் பகுதியில் தாக்குதல் நிகழ்த்துவதை நிறுத்தி வைத்திருந்தது. அந்தப் பகுதியிலோ, அதனைச் சுற்றியுள்ள பகுதியிலோ ரஷிய அல்லது சிரியா ராணுவ வீரர்களின் நடமாட்டம் இல்லை.

எனவே, தரைப் படையினருக்குப் பக்கபலமாக இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை.

கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா தாக்குதல் நிகழ்த்தியுள்ளது, அதன் உள்நோக்கத்தைக் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்குமாறும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளிக்குமாறும் ரஷியாவை வலியுறுத்துவோம் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், ரஷியத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை.

சிரியா உள்நாட்டுப் போரில், அதிபர் அல்-அஸாதுக்கு எதிரான மிதவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

கிளர்ச்சிக் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பயிற்சியும், ஆயுதமும் அளித்து வருகிறது.

இந்தச் சூழலில், அல்-அஸாத் அரசுக்கு ஆதரவளித்து வரும் ரஷியா, ராணுவத்துக்குப் பக்கபலமாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.