செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா

கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா கடலில் தவித்து வந்த 44 ஈழத் தமிழ் அகதிகள் தரையிறங்க அனுமதி | இந்தோனேசியா

1 minutes read

தமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் கோளாறால் தரை தட்டியது.

ஆச்சேவில் தத்தளிப்பு ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்களுடன் உள்ள இப்படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த படகு தொடர்பாக தகவல் கிடைத்த இந்தோனேசிய கடற்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அத்துடன் படகை கரைக்கு கொண்டு வந்து எரிபொருள் மற்றும் உணவு உதவிகளை வழங்கவும் இந்தோனேசியா முடிவு செய்தது. ஆனால் அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தது இந்தோனேசியா.

இந்த நிலையில் படகின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகத்துக்கே அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை படகில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏற்க மறுத்து தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அப்படி செய்யாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று இந்தோனேசிய கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுட்டுக் கொல்லுமாறு பிஞ்சு குழந்தைகளுடன் கெஞ்சுகிற   வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவுகிறது.

தற்போது இந்தோனேசிய போலீசார் ஒருவாரம் தவித்து வந்த அவர்களை ஆச்சே  கடற்கரையில் தரை இறங்க அனுமதி அளித்து உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.