பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகரில் 32 உயிர்களை பறித்த தீவிரவாத தாக்குதலைப் போல் மேலும் ஒரு புதிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த 12 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் அதிரடியாக தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் சிரியாவில் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பிரதமர் சார்லஸ் மைக்கேல் மற்றும் மந்திரிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பூட்டி கிடக்கும் கார் ஷெட்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்துக்குரிய 40 பேரை பிடித்து விசாரித்ததில் தீவிரவாத தொடர்புகள் இருப்பது உறுதிசெய்யப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.