அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பரவிய காட்டுத்தீயால் 80 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியது.100க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வருகிற காட்டுத்தீ, இசபெல்லா ஏரிக்கரையோரம் அமைந்திருந்த 80 வீடுகளை சாம்பலாக்கிவிட்டது. அங்கு ஹெலிகாப்டர்களை கொண்டு ரசாயன பொடிகளை தூவி, தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை காரணமாக இது போன்ற காட்டுத்தீ பரவியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.