செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போர் ஒப்பந்தம் அமலில் இருக்கும் யேமனில் மீண்டும் சண்டை தீவிரம் | 33 பேர் சாவுபோர் ஒப்பந்தம் அமலில் இருக்கும் யேமனில் மீண்டும் சண்டை தீவிரம் | 33 பேர் சாவு

போர் ஒப்பந்தம் அமலில் இருக்கும் யேமனில் மீண்டும் சண்டை தீவிரம் | 33 பேர் சாவுபோர் ஒப்பந்தம் அமலில் இருக்கும் யேமனில் மீண்டும் சண்டை தீவிரம் | 33 பேர் சாவு

0 minutes read

போர் ஒப்பந்தம் அமலில் இருக்கும் யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் சண்டை தீவிரமடைந்தது.

இதில் 22 ஹூதி கிளர்ச்சியாளர்களும், 11 அரசுப் படையினரும் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஜாஃப் மாகாணத்தின் அல்-முதூன் மாவட்டத்தில் அரசு ஆதரவுப் படையினர் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நிகழ்த்தினர்.

அதையடுத்து, சவூதி கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல் உதவியுடன் அரசுப் படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது எதிர் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் 13 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

சவூதி விமானங்களின் குண்டு வீச்சின்போது குறி தவறியதில், 8 யேமன் ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஷாப்வா மாகாணம், பேஹான் பகுதியில் ராணுவத்துடனான மோதலில் 3 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர்.உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் யேமனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை குவைத்தில் நடந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.