ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறினாலும் அந்நாடுகளுடன் நட்பு தொடரும் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதால், ஆங்கிலத்தையும் தங்களது பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.