செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது

ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது ஈராக்கில்உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்தது

0 minutes read

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது.

 

 

மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதிகளை மீட்க, ஈராக் ராணுவம், அவர்களுடன் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில், கடந்த வாரம் இரண்டு இடங்களில் தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 100 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

 

காயம் அடைந்தவர்களில் பலர், தற்போது உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 250 ஆக நேற்று அதிகரித்தது. கடந்த, 2003ல், அமெரிக்க படையினர் ஊடுருவிய பின், ஈராக்கில் நடந்த தாக்குதலில், இவ்வளவு அதிகமானோர் உயிரிழந்துள்ளது இதுவே முதல்முறை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.