செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் | அதிபர் சிறிசேனாஇலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் | அதிபர் சிறிசேனா

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் | அதிபர் சிறிசேனாஇலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் | அதிபர் சிறிசேனா

1 minutes read

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

இலங்கை போர்க்குற்றம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கணக்கிட்டுள்ளது. ராஜபக்சே ஆட்சியின்போது நடந்த இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

தமிழ் இயக்கங்களும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கை நீதித்துறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் தகுதியை இழந்துவிட்டது. எனவே இலங்கை ராணுவம் மீதான போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறின.

அனுமதிக்க மாட்டோம்

ஐ.நா. மனித உரிமை குழு இந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை குழுவில் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

இதனை இப்போதைய இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் ஏற்க மறுத்தனர். வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

இந்நிலையில் புத்த துறவிகள் நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ‘‘எந்த பகுதியில் வேண்டுமானாலும் விசாரணை நடைபெறட்டும். ஆனால் நான் அதிபராக இருக்கும் வரை இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மாட்டேன். இலங்கையின் சுதந்திரம், இறையாண்மைக்கு எதிரான எதையும் நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.