செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தற்கொலை படை தாக்குதல் 11 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | பாக்தாத்தற்கொலை படை தாக்குதல் 11 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | பாக்தாத்

தற்கொலை படை தாக்குதல் 11 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | பாக்தாத்தற்கொலை படை தாக்குதல் 11 பேர் உடல் சிதறி உயிரிழப்பு | பாக்தாத்

1 minutes read

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் காய்கறி, பழச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் நேற்று காலை மக்கள் ஏராளமாக வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு வந்த ஒரு லாரியை தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிக்க வைத்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அப்பாவி மக்கள் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் 35 பேர் படுகாயம் அடைந்தனர். பல கார்கள் உருக்குலைந்து போயின.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து சென்று அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முத்திரை இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த வாரம் அங்கு காராடா மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.