செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்

ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள்

1 minutes read

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) மற்றும் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியாவுடன் இணைந்து நடவடிகை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத அவர், ரஷியா செல்வதற்கு முன்னதாக

அதுகுறித்து வெளிப்படையாகப் பேச முடியாது என்று மட்டும் கூறினார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ரஷியா செல்கிறார்.

உள்நாட்டு சண்டை நடைபெற்று வரும் சிரியா பற்றி அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது, பொது எதிரிகளான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்த யோசனையை ஜான் கெர்ரி முன்வைப்பார் என்று “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்தது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான அமெரிக்கா – ரஷியா விமானப் படை அதிகாரிகள் இடம்பெறும் கட்டுப்பாட்டுக் குழுவை அமைப்பது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

இதுகுறித்து ரஷியா புறப்படுவதற்கு முன் ஜான் கெர்ரியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்து ஜான் கெர்ரி கூறியதாவது:

ரஷியா சென்று நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை இப்போதே வெளியிட முடியாது என்றார் அவர்.

தற்போது சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக ரஷியாவும், மிதவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐ.எஸ் மற்றும் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகள் மீது தனித் தனியாக வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.