செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரான்ஸ் அரசு | பாதுகாப்புப் படைகளில் சேர பொதுமக்களுக்கு அழைப்புபிரான்ஸ் அரசு | பாதுகாப்புப் படைகளில் சேர பொதுமக்களுக்கு அழைப்பு

பிரான்ஸ் அரசு | பாதுகாப்புப் படைகளில் சேர பொதுமக்களுக்கு அழைப்புபிரான்ஸ் அரசு | பாதுகாப்புப் படைகளில் சேர பொதுமக்களுக்கு அழைப்பு

1 minutes read

நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் பாதுகாப்புப் படைகளில் அதிக அளவில் பொதுமக்கள் சேர வேண்டும் என்று பிரான்ஸ் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பிரான்ஸில் கடந்த 18 மாதங்களில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸனூவ் கூறியதாவது:

அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் விருப்பத்தின் பேரில் இணைந்து காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 12,000-ஆக உள்ளது.

துணை ராணுவத்தில் 9,000 பேர், காவல் துறையில் 3,000 பேர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழலில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும்.

அவ்வாறு சேரும் பொதுமக்கள் அனைவரும் காத்திருப்புப் படைப் பிரிவில் வைக்கப்படுவர். நெருக்கடியான கால கட்டங்களில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.

பிரான்ஸில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணிகளில் தற்சமயம் 1 லட்சம் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 10,000 ராணுவ வீரர்கள், 36,000 துணை ராணுவ வீரர்கள், 53,000 போலீஸார் அடங்குவர்.

தாக்குதலில் தொடர்புடைய மேலும் இருவர் கைது

பிரான்ஸில் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக கருதுப்படும் மேலும் இருவரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, நைஸ் நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியைக் காண வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது முகமது லாஹுவாயிஸ் பிலால் (31) என்ற துனீசிய வம்சாவளி இளைஞர், லாரியை வேகமாக ஓட்டி வந்து மக்கள் கூட்டத்தில் பயங்கரமாக மோதினார். இச்சம்பவத்தில், 10 குழந்தைகள் உள்பட 84 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதலை நிகழ்த்திய பிலாலின் முன்னாள் மனைவி உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.