செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது

பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது பசில் ராஜபக்சே இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது

1 minutes read

ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்தபோது அவருடைய மூத்த மகன் நமல் (வயது 30) இந்திய நிறுவனத்துக்கு கொழும்பு நகரில் ரியல் எஸ்டேட் தொடங்க அனுமதி அளித்ததற்காக ரூ.7 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி இலங்கையின் நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நமல் ராஜபக்சேவை கடந்த வாரம் கைது செய்தனர்.
தன்னை ஜாமீனில் விடக்கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது கொழும்பு நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்  விசாரணை நடந்தது. அப்போது ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, நமல் வெளிநாடு செல்ல தடை விதித்தார்.
நமல் ராஜபக்சே ஜாமீனில் விடுதலையான அதே நேரம், ராஜபக்சேயின் இளைய சகோதரர் பசில், தனது சகோதரரின் ஆட்சிகாலத்தில் நடந்த வாழ்வாதார நிதி முறைகேடு தொடர்பாக  இன்று காலை நிதிமுறைகேடு குற்றப்பிரிவு போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.
அண்மையில், நமல் ராஜபக்சேயின் இளைய சகோதரர் யோஷிதா, விளையாட்டு டெலிவிஷன் சேனல் தொடர்பான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.