செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடுவெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு

வெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடுவெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு

1 minutes read

வெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை வாங்குவதற்காக சுமார் ஒரு லட்சம் பேர் அண்டை நாடான கொலம்பியாவுக்கு எல்லை தாண்டிச் சென்றனர்.

இதுகுறித்துத் தகவல்கள் தெரிவிப்பதாவது:

பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதியைப் பெரிதும் நம்பியுள்ள வெனிசூலாவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது.

அந்த நாட்டின் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், மானிய விலையில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் அண்டை நாடான கொலம்பியாவுக்கு கடத்தப்பட்டு, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வெனிசூலாவின் இடதுசாரி அரசு குற்றம் சாட்டியது.

அதன் காரணமாகவே உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, கொலம்பியாவுடனான 2,219 கி.மீ. நீள எல்லையை வெனிசூலா அரசு கடந்த ஆண்டு மூடியது.

இந்த நிலையில் உணவுப் பொருள் தட்டுப்பாடு மேலும் கடுமையாக அதிகரித்தது.

இதையடுத்து, பொதுமக்கள் கொலம்பியா சென்று பொருள்களை வாங்குவதற்காக அந்த நாட்டுடனான எல்லைப் பகுதியை வெனிசூலா அரசு கடந்த சனிக்கிழமை திறந்தது.

ஏற்கெனவே முந்தைய வார இறுதியிலும் இதேபோல் எல்லை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை சுமார் 1 லட்சம் பேர் எல்லை கடந்து கொலம்பியா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லைப் பகுதியில் பெருமளவு வெனிசூலா படையினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும், பரபரப்பான சூழல் நிலவினாலும் எல்லை தாண்டி செல்வதற்காக பொதுமக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருந்ததாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.