நியூயார்க்: அமெரிக்காவில், பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற, 71 வயது பாட்டி, அங்கே சந்தித்த 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார்.
அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை சேர்ந்தவர், அல்மெடா எரெல், 71. இவரது, 45 வயது மகன், சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதற்கான இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது, கேரி ஹார்ட்விக் என்ற 17 வயது சிறுவனை சந்தித்தார். கடந்த, 2013ல், தன் கணவர் டொனால்ட் இறந்தபின், தனிமரமாக வாழ்ந்து வந்த அல்மெடாவுக்கு, கேரியை, முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்து விட்டது. கேரி, வயதான பெண்களை காதலிப்பதில் அலாதி பிரியம் உள்ளவர். தன் எட்டு வயது முதல், பல பெண்களை காதலித்து கைவிட்டு, கடைசியாக, 77 வயது பாட்டியை காதலித்தார் கேரி. அந்த காதல் பாதியில் கசந்திருந்த நிலையில், அல்மெடா மீதும் காதல்வயப்பட்டார். இதையடுத்து, சில நாள் பழக்கத்துக்கு பின், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் உறவுக்கு இருதரப்பு உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கடந்த ஆண்டு அக்டோபரில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அல்மெடாவை திருமணம் செய்ய, கேரியின், 48 வயது தாயும், 71 வயது பாட்டியும் ஆசி வழங்கியுள்ளனர்.