செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லைரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை

ரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லைரஷ்ய அணிக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடையில்லை

1 minutes read

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையாக தடையில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஷிய தடகள அணி, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள கூட்டமைப்பு தடை விதித்தது.

அதனை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தின் லாசனில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ரஷியா மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த விளையாட்டு தீர்ப்பாயம், ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

மேலும் சர்வதேச தடகள கூட்டமைப்பின் விதிமுறைப்படி, அந்த கூட்டமைப்பினால் இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதியில்லாதவர்கள் என்பது சரியான முடிவுதான் என்று கூறப்பட்டது.

ரஷ்யாவிலிருந்து 387 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றிருந்தனர். ஊக்க மருந்து சர்ச்சையை அடுத்து ஒட்டு மொத்த வீரர்களும் பங்கு பெற முடியாது என்ற கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு முழுமையான தடையில்லை என்றும் ரஷ்யாவை சேர்ந்த தடகள வீரர்களை மட்டுமே தடை செய்துள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தவறு செய்யாத, திறமையான ரஷ்ய வீரர்கள், வீராங்கனைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம் என்பது குறித்தும் ஒலிம்பிக் சம்மேளனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.