நேபாள நாட்டு பிரதமர் கே.பி.ஒலி தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாள நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் கே.பி.ஒலி. இவர் அந்த நாட்டின் அரச வம்ச ஆட்சியில் இருந்து வெளிவந்து புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு நேபாள நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இவருக்கு நேபாள மாவோயிஸ்ட்டுகள் தங்கள் ஆதரவை அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது ஆட்சி மீது மாவோயிஸ்ட்டுகளுக்கு அதிருப்தி எழுந்து வந்தது. நேபாள அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை மாவோயிஸ்ட்டுகள் திடீர் விலகினர். மேலும் நேபாளத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருந்த நிலையில் இன்று மாலை தனது பிரதமர் பதவியை கே .பி ஒலி ராஜினாமா செய்தார்.