செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறதுவெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறது

வெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறதுவெரிசான் 483 கோடி டாலருக்கு யாகூவை வாங்குகிறது

1 minutes read

இணையதளத்தில் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்து பிரபல இணையதள தேடல் பொறி நிறுவனமான யாகூவை, அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டாலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் வெரிசான் நிறுவனம், யாகூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, யாகூ நிறுவனம் தனது பங்குகளை, வெரிசானுக்கு விற்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏ.ஓ.எல் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு, வெரிசான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது யாகூ நிறுவனத்தின் தேடல் பொறி, செய்திகள், வணிகம், விளையாட்டு, வீடியோ சேவை, இ-மெயில், டம்ளர் சமூக தளம் ஆகியவை வெர்சான் நிறுவனத்திற்கு கீழ் செயல்பட உள்ளது.

இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது.

 கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருந்ததால், இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மரிசா மேயர் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அனைத்து வர்த்தகமும் முழுமையாக வெரிசான் நிறுவனத்திற்கு கைமாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து, யாஹூ நிறுவனத்தை வாங்க முயற்சித்தது. ஆனால் அப்போது யாகூ மறுத்துவிட்டது.

ஒரு காலத்தில் இணையதளத்தில் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த யாகூ, பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை வாங்கும் முயற்சியை ஒரு காலத்தில் மேற்கொண்டது, தற்போது சந்தை வாய்ப்பை இழந்துள்ளதால் வெரிசான் நிறுவனம் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.