செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்காவெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்கா

வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்காவெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலி | அமெரிக்கா

1 minutes read

அமெரிக்காவில் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்தனர்.

வானில் வெப்ப காற்று பலூனில் பறப்பது என்பது ஒரு உற்சாகமான கிளர்ச்சியூட்டும் அனுபவம். இந்த பலூன்கள் வளி மண்டலத்துக்கு தாண்டி பறக்க முடியாது.

முதன்முதலில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் மான்ட்கால்பியர் சகோதரர்கள் 1783-ம் ஆண்டு இந்த வெப்ப காற்று பலூனை உருவாக்கி, வெப்ப காற்று பலூன் பயணத்தை நடத்திக்காட்டினார்கள். அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இது பிரபலம் ஆயிற்று. அங்கு 1793-ம் ஆண்டு முதன்முதலாக வெப்ப காற்று பலூன் பயணம் தொடங்கியது. அங்கு டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் ‘ஹார்ட் ஆப் டெக்சாஸ் பலூன் ரைட்ஸ்’ என்ற நிறுவனம் வெப்ப காற்று பலூன் பயணங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் 16 பேர் ஒரு வெப்ப காற்று பலூனில் பயணம் செய்தனர். ‘ஹார்ட் ஆப் டெக்சாஸ் பலூன் ரைட்ஸ்’ நிறுவனத்துக்கு உரியது என நம்பப்படுகிற அந்தப் பலூன், சற்றும் எதிர்பாராத வகையில், ஆஸ்டின் நகருக்கு தெற்கே லோக்கார்ட் என்ற இடத்தில் தீப்பிடித்து பூமியில் விழுந்தது.

அதில் பயணம் செய்த 16 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுபற்றி கால்ட்வெல் நகர ஷெரீப் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பலூனில் 16 பேர் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை” என கூறப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாண பொது பாதுகாப்பு துறையும், அந்த பலூனில் பயணம் செய்த 16 பேரும் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்துள்ளது.

நெருக்கடி கால ஊழியர்கள் இந்த விபத்து பற்றி குறிப்பிடுகையில், “பலூனில் அதன் ஓட்டுனரும், பயணிகளும் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய கூடையில் தீப்பிடித்துள்ளது” என்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மார்க்கரெட் வைலி என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், “பலூன் மோதி விழுவதற்கு முன்னதாக உயர் அழுத்த மின்சார வயர்களில் விழுந்தது. அப்போது துப்பாக்கியால் சுடுவது போன்ற சத்தம் கேட்டது. பலூன் எரிந்து கீழே விழுந்தபோது, அது ஒரு பெரிய தீப்பந்து விழுவது போல இருந்தது” என்றார். அந்த பலூனில் பயணம் செய்தவர்கள் யார், யார் என்ற விவரம் இன்னும் தெரிய வரவில்லை. சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினரும், போலீஸ் படையினரும் விரைந்தனர்.

இப்படி வெப்ப காற்று பலூன்கள் விபத்துக்குள்ளாவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் லக்சார் என்ற இடத்தில் வெப்ப காற்று பலூன் விபத்தில் 19 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.