செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்

1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்1,389 வீரர்கள் துருக்கி ராணுவத்தில் இருந்து நீக்கம்

1 minutes read

துருக்கி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மத பிரசாரகர் குலென் உடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 1,389 படை வீரர்களை அந்நாட்டு ராணுவம் நீக்கியுள்ளது.

துருக்கி நாட்டின் ஜனாதிபதி டய்யீப் எர்டோகன், ராணுவத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன் என கூறினார்.  அவற்றில் ராணுவ அகாடெமிகளை மூடுவது, ராணுவத்தினை அரசின் கட்டுக்குள் உறுதியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை வகுப்பது ஆகியவையும் அடங்கும்.  ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் வீரர்கள் வெளியேற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துருக்கி நாட்டை சேர்ந்த மதபோதகரான பெதுல்லா குலென் பல வருடங்களாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார்.  இந்நிலையில், அவர் அங்கிருந்து கொண்டு ஆதரவாளர்கள் துணையுடன் துருக்கி நாட்டு அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் குற்றம் சாட்டினார்.  இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குலென், அரசு கவிழ்ப்பு முயற்சிக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.  அரசை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டது துருக்கியின் ஜனநாயகத்தில் ஏற்பட்ட கறுப்பு கறை என இந்த சம்பவத்திற்கு பின் யில்டிரிம் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.