செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மரண தண்டனை 20 பயங்கரவாதிகளுக்கு நிறைவேற்றம் | ஈரான்மரண தண்டனை 20 பயங்கரவாதிகளுக்கு நிறைவேற்றம் | ஈரான்

மரண தண்டனை 20 பயங்கரவாதிகளுக்கு நிறைவேற்றம் | ஈரான்மரண தண்டனை 20 பயங்கரவாதிகளுக்கு நிறைவேற்றம் | ஈரான்

1 minutes read

ஈரானில் சன்னி பிரிவைச் சேர்ந்த 20 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரான் அரசுக்கு சொந்தமான ஐ.ஆர்.ஐ.பி. தொலைக்காட்சி இது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இருபது பயங்கரவாதிகளுக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் குர்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரைக் கொலை செய்த குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும், பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியது, சன்னி பிரிவைச் சேர்ந்த மதத் தலைவர்களைப் படுகொலை செய்தது ஆகிய குற்றங்களைச் செய்த கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அனைத்து பயங்கரவாதிகளும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.ஆர்.ஐ.பி. தொலைக்காட்சி தெரிவித்தது.

அரசு தலைமை வழக்குரைஞர் முகமது ஜாவேத் மொன்டஜேரி அளித்த தகவலின் அடிப்படையில் அந்தச் செய்தி வெளியிடப்படுவதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்த நிலையில், ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு நாட்டில் 24 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு மாகாணங்களில் 21 பேர் பலியானதற்கு, தெளஹீத் தீவிரவாத அமைப்பினர் காரணமாக இருந்தனர் என்றும் அந்தக் குழுவைச் சேர்ந்த 102 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் கைதாகியுள்ளனர்; பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் சிலர் கொல்லப்பட்டனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2009-இல் மமூஸ்தா போர்ஹான் ஆலி, மமூஸ்தா முகமது ஷேக் அல்-இஸ்லாம் ஆகிய இரு முக்கிய சன்னி பிரிவுத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.