பீட்சா பிரியர்களுக்காக, அமெரிக்காவில் உள்ள பல்கலையில், பீட்சா ஏ.டி.எம்., இன்று முதல் செயல்படத் துவங்கவுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோ பிராந்தியத்தில் உள்ள, சேவியர் பல்கலையில், இந்த பீட்சா இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இயந்திரத்தில், 70 பீட்சாக்களை வைக்கும் பிரத்யேக பெட்டி உள்ளது.
பீட்சா, ‘ஆர்டர்’ கிடைத்ததும், மூன்று நிமிடங்களில் தானியங்கி முறையில், சுவையான பீட்சா, சுடச்சுட வெளிவரும். 24 மணி நேரமும் இயங்கும், இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரையை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான பீட்சாக்களை தேர்வு செய்யலாம். அதற்கான விலையை செலுத்த, வங்கி கிரடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வசதி உள்ளது. ஒரு பீட்சாவின் விலை, 667 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.