செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 11 சிசுக்கள் பலி | இராக்மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 11 சிசுக்கள் பலி | இராக்

மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 11 சிசுக்கள் பலி | இராக்மகப்பேறு மருத்துவமனை தீ விபத்தில் 11 சிசுக்கள் பலி | இராக்

0 minutes read

இராக் தலைநகர் பாக்தாதில், மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 11 சிசுக்கள் உயிரிழந்ததாக மருத்துவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அகமது அல்-ருடெய்னி தெரிவித்ததாவது:

பாக்தாத் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள யார்மெளக் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், குறைமாதத்தில் பிறந்த 11 சிசுக்கள் உயிரிழன. 29 சிசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தீவிபத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 3 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக்தாதின் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால், பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அந்த நகரின் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.