சீனாவை சேர்ந்த பான் (32) என்ற பெண், ஜப்பானிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்ற குரூஸ் என்ற கப்பலில் கடந்த 10ம் தேதி பயணம் செய்துள்ளார். அவர் ஷாங்காய் பகுதி அருகே வந்த போது கப்பலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ஆனால் தன் மகள் வீடு திரும்பாததை அறிந்த அவரது தந்தை பான் சென்ற கப்பலுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்களோ தாங்கள் பயணிகள் அனைவரையும் ஷாங்காய் நகரில் இறக்கிவிட்டதாக கூறினார்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அப்பகுதி வழியே படகில் சென்ற ஒருவர் பான் கடலில் தத்தளித்துகொண்டிருப்பதை கண்டு அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீன்கள் சில கடித்திருப்பதாகவும், அதனால் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 91 அடி ஆழம் உள்ள கடலில் ஒரு லைப் ஜாக்கெட் இல்லாமலும், உணவு எதுவுமில்லாமல் தொடர்ந்து 38 மணி நேரம் கடலில் பான் உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு அவரது தந்தையார் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பான் ஒரு நல்ல நீச்சல் வீரர் என்பதால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.