செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் செல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறன் குன்றும்!செல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறன் குன்றும்!

செல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறன் குன்றும்!செல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறன் குன்றும்!

1 minutes read

அதி நவீன செல்லிடப் பேசிகளான ஸ்மார்ட்போன்களால் மூளையின் நினைவுத் திறம் பாதிக்கப்படுவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து “டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸஸ்’ இதழில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மூளை செயல்திறன் குறித்த ஆய்வு மேற்கொண்டு வரும் சாம் கில்பர்ட் கூறியதாவது:

ஸ்மார்ட்போன்கள், மடி கணினிகள், கணினிகள் ஆகியவை நமது அன்றாடச் செயல்களை எளிதாக்குகின்றன.

அவற்றின் உதவியுடன் தேவையான தகவல்களை உடனடியாகத் தேடித் தெரிந்து கொள்ள முடிகிறது.

கடைகளில் வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலை நினைவில் வைத்திருக்க வேண்டி அவசியமில்லாமல் அந்த சாதனங்களே சொல்லிவிடுகின்றன.

இத்தகைய நவீன சாதனங்கள், ஒருவரை சந்திக்க வேண்டிய சரியான நேரத்தில் அதுகுறித்து நினைவூட்டுகின்றன.

இதுபோன்ற உதவிகளால், மூளை தேவையில்லாமல் பல பணிகளை செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இதன்மூலம் மூளையின் செயல்திறன் ஏராளமாக சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு செயல்திறன் சேமிக்கப்படுவதால், மூளையின் நினைவுத் திறன் அதிகரித்திருக்க வேண்டும்.

ஆனால், நவீன சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் நினைவுத் திறன் குறைந்துவிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

உதாரணத்துக்கு, செயற்கைக் கோள் மூலம் வழித்தடங்களைக் காட்டும் சாதனங்கள் உதவியுடன் பயணித்தவர்கள், அந்தச் சாதனம் இல்லாமல் அதே வழியில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நவீன சாதனங்கள் உதவியுடன் மூளையின் வேலைச்சுமையைக் குறைக்கும் அதே நேரத்தில், அது நமது நினைவுத் திறனை எந்த அளவு பாதிக்கிறது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.