செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்திய தம்பதிக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை | அமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடிஇந்திய தம்பதிக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை | அமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடி

இந்திய தம்பதிக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை | அமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடிஇந்திய தம்பதிக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை | அமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடி

1 minutes read

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை போலியாக தயாரித்துசுமார் 50 லட்சம் டாலர் அளவில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மோசடி செய்த இந்திய வம்சாவளி தம்பதியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்தவர் கிரிட்டிஷ் பட்டேல்(54). அந்நாட்டு சட்டங்களின்படி அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் இருப்பதால் நோய் குறியீடு தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் ஆலோசனைகளை போலியாக இவர் தயாரித்துதந்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை சுமார் 50 லட்சம் டாலர் அளவில் மோசடி செய்ததாக அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இந்த மோசடியில் கிரிட்டிஷ் பட்டேலுக்கு துணையாக இவரது மனைவி நிட்டா பட்டேல்(53) என்பவரும் இருந்துள்ளார்.

நோய் குறியீடுகளை கண்டறியும் பரிசோதனை கூடம் அமைப்பதற்கு முறையான அனுமதி பெறாமல் இந்த தம்பதியர் சுமார் 10 ஆயிரம் பேருக்கு போலியாக பரிசோதனை அறிக்கை தயாரித்துதந்து, அதன்மூலம் சுமார் 48 லட்சம் டாலர்கள்வரை பணப்பலனாக பெற்ற விபரம் போலீசாரின் விசாரணையில் தெளிவானது.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை நடந்த இந்த மோசடியை பட்டேல் தம்பதியர் கோர்ட்டில் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி கிரிட்டிஷ் பட்டேலுக்கு எட்டாண்டு சிறை தண்டனையும், அவரது மனைவியான  நிட்டா பட்டேலுக்கு ஆறரை ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மோசடி செய்த தொகையான 48 லட்சம் டாலர்களையும் உடனடியாக திருப்பி செலுத்தும்படி உத்தரவிட்ட நீதிபதி, தண்டனை காலம் முடிந்து விடுதலையாகும் இந்த தம்பதியர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.