செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துருக்கியில் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை | ஏராளமான வர்த்தகர்கள் அதிரடி கைதுதுருக்கியில் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை | ஏராளமான வர்த்தகர்கள் அதிரடி கைது

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை | ஏராளமான வர்த்தகர்கள் அதிரடி கைதுதுருக்கியில் ராணுவ புரட்சிக்கு எதிராக நடவடிக்கை | ஏராளமான வர்த்தகர்கள் அதிரடி கைது

1 minutes read

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று ஏராளமான வர்த்தகர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ராணுவ புரட்சி முறியடிப்பு

துருக்கியில் கடந்த மாதம் 15–ந்தேதி திடீரென புரட்சியில் ஈடுபட்ட ராணுவம் அதிபர் தையிப் எர்டோகனை அகற்றி விட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றது. ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் உள்பட 240 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆனால் ராணுவத்தின் முயற்சியை போலீசார் வெற்றிகரமாக முறியடித்ததுடன், புரட்சியில் ஈடுபட முயன்ற ஏராளமான ராணுவ அதிகாரிகளை கைது செய்தனர். இந்த பதிலடி தாக்குதலின் போது ராணுவத்தினர் உள்பட புரட்சி ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் உயிரிழந்தனர்.

பிரதமர் தகவல்

ராணுவத்தின் இந்த புரட்சிக்கு பெதுல்லா குலான் என்பவரை தலைவராக கொண்ட மத அமைப்பு ஒன்றே காரணம் என துருக்கி அரசு குற்றம் சாட்டி வருகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் பெதுல்லாவை கைது செய்து தங்களிடம் நாடு கடத்துமாறு அமெரிக்காவை துருக்கி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தங்கள் நாட்டுக்குள்ளே இருந்து ராணுவ புரட்சிக்கு உதவி செய்த பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை துருக்கி அரசு கைது செய்து வருகிறது. இந்த அதிரடி வேட்டையின் பலனாக இதுவரை 40 ஆயிரத்து 29 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார். இவர்களில் 20 ஆயிரத்து 335 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

80 ஆயிரம் பேர் இடைநீக்கம்

இந்த புரட்சிக்கு ஆதரவு அளித்ததாக ராணுவம், போலீஸ், நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறைகளை சேர்ந்த 5 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த துறைகளை சேர்ந்த மேலும் சுமார் 80 ஆயிரம் பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மேலும் பெதுல்லா குலானுடன் தொடர்புடைய 4 ஆயிரத்து 262 நிறுவனங்கள் மூடப்பட்டன.

துருக்கி அரசின் இந்த அதிரடி வேட்டையின் ஒரு பகுதியாக ராணுவ புரட்சிக்கு பண உதவி அளித்தவர்கள் என கருதப்படும் வர்த்தகர்களை வேட்டையாடும் பணிகள் தொடங்கியது. இது தொடர்பாக 187 கைது வாரண்டுகளை பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்தன.

1000 போலீசார்

அதன்படி துருக்கியின் பொருளாதார தலைநகராக விளங்கும் இஸ்தான்புல் நகர் மற்றும் 15 மாகாணங்களில் நேற்று ஒரே நேரத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வேட்டையில் சுமார் 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வர்த்தகர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.

இவ்வாறு ராணுவ புரட்சிக்கு ஆதரவும், உதவியும் அளித்தவர்களுக்கு எதிராக துருக்கி அரசு மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.