கடந்த 2015- ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறி செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.
விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தது உறுதிப்பட்டதையடுத்து சென்ற பிப்ரவரியில் 1.25 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும், 2.35 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தற்போதுமுடக்கப்பட்டுள்ளன. ஆக, மொத்தம் 3.6 லட்சம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
டுவிட்டர் உறுதி:டுவிட்டர் வலைதளத்தை பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற கணக்குகளை வலைதளத்தில் இருந்து நீக்குவதில் டுவிட்டர் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.