செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 36 பேருக்கு, ஈராக் கோர்ட், மரண தண்டனை ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 36 பேருக்கு, ஈராக் கோர்ட், மரண தண்டனை

ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 36 பேருக்கு, ஈராக் கோர்ட், மரண தண்டனை ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 36 பேருக்கு, ஈராக் கோர்ட், மரண தண்டனை

1 minutes read

ஈராக்கில், 2014ல், நுாற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கடத்தி, படுகொலை செய்த வழக்கில், 36 பேருக்கு, நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈராக்கில் உள்ள திகார் மாகாணத்தில், ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெருமளவில் உள்ளனர்.

இம்மாகாணத்தை சேர்ந்த பலர், ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, திக்ரித் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 2014ல், இங்கிருந்து, 1,700 பேரை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தோர் கடத்திச் சென்றனர்; அவர்களில், 400 பேர் கொல்லப்பட்டதாக, ஐ.எஸ்., அமைப்பு, பின் அறிவித்தது.

 

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, 36 பேருக்கு, ஈராக் கோர்ட், மரண தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென, பிரதமர் ஹைதர் அல் அபாதி வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், 36 பேரின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஈராக் அதிபர் பாத் மசும், சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நஸிரியா நகர சிறையில், 36 பேரின் மரண தண்டனை, நேற்று நிறைவேற்றப்பட்டது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.