செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிலிப்பின்ஸ் அதிபர் மிரட்டல்பிலிப்பின்ஸ் அதிபர் மிரட்டல்

பிலிப்பின்ஸ் அதிபர் மிரட்டல்பிலிப்பின்ஸ் அதிபர் மிரட்டல்

1 minutes read

ஐ.நா. அமைப்பிலிருந்து விலகப் போவதாக பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகா டுடேர்தே மிரட்டியுள்ளார்.

பிலிப்பின்ஸில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய முன்னாள் மேயர் டுடேர்தே வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, நாட்டில் பெருகி வரும் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்போவதாகக் கூறிய அவர், குற்றங்களில் ஈடுபடும் 1 லட்சம் பேரைக் கொன்று கடலில் வீசப்போவதாகவும், அந்த உடல்களைத் தின்று கடல் மீன்கள் கொழுக்கும் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தச் சூழலில், அவர் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு பிலிப்பின்ஸில் 1,500 குற்றவாளிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஐ.நா. அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து, விசாரணையில்லா மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான ஐ.நா. சிறப்புக் கண்காணிப்பாளர் ஏக்னெஸ் காலமர்ட் கூறுகையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொல்லும் போலீஸாருக்கு அதிபர் டுடேர்தே சட்டப் பாதுகாப்பு வழங்கியிருப்பது சர்வதேசச் சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சித்தார்.

இந்தச் சூழலில், அதிபர் டுடேர்தே ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

எங்கள் நாட்டு உள் விவகாரங்களில் ஐ.நா. தலையிடுவதை ஏற்க முடியாது. எங்களை மதித்து நடக்க ஐ.நா.வால் முடியாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து விலகி விúடுவோம்.ஐ.நா.வுக்குப் பதிலாக புதிய சர்வதேச அமைப்பை ஏற்படுத்துவது குறித்து யோசித்து வருகிறேன். அந்த அமைப்பில் இணைய சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுப்பேன் என்றார் அவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.