1
இந்திய வங்கதேசத்தை ஒட்டிய மியான்மர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதும் உடனடியாக கிடைக்கவில்லை.
இங்கு காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பலர் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5. 5 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இங்கு ஏற்பட்ட நேரத்தில் அசாம் மற்றும மணிப்பூர், நாகாலந்து பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.