2

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அந்த நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த, மாகாண நிர்வாகத்தின் நிதி மற்றும் பிற ஆதாரங்களை தங்குதடையின்றி பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.