செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி

ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி ரஷியா-அமெரிக்கா பேச்சு | துருக்கி

1 minutes read

சிரியா விவகாரம் குறித்து ரஷிய – அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

பல மணி நேரம் நீண்ட அந்தப் பேச்சின் மூலம், சிரியா விவகாரத்தில் தெளிவு பிறந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சிரியாவில் முழுமையான போர் நிறுத்தத்தை அறிவித்தல், அதற்காகப் பல்வேறு கட்டங்களாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அங்கு மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளும் வழங்குதல் என்பவை உள்ளிட்ட விவகாரங்களை இருவரும் விவாதித்தோம். சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

அமைதி நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு சிக்கலான விஷயங்களில் தெளிவு பிறந்துள்ளது. அமைதிப் பேச்சு குறித்து சில கடினமான அம்சங்கள் பற்றி இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து ஜெனீவாவில் விவாதிப்பார்கள் என்றார்.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் கூறியதாவது: ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மீண்டும் சுமுகம் அடைந்திருப்பது வரவேற்கத்தக்கது. சிரியா அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஐ.நா. முன்னனிலையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரலில் தடைபட்டது. அதனை மீண்டும் நடத்த வேண்டும் என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது என்றார்.

ரஷியா-அமெரிக்கா பேச்சில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட இருவரும் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிரியா அரசு, கிளர்ச்சியாளர்கள் ஆகியோரின் ஆலோசனைக்குப் பிறகுதான் எந்த விவரத்தையும் வெளியிட முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.