எகிப்தின் கெய்ரோவில் இருந்து 3,900 மைல்கள் வடகிழக் கில் கஜகஸ்தானின் சார்யார்கே பகுதியில் ஒரு பழமையான பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டிஸோசர்’ பிரமிடு, கி.மு. 2700–ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமிடு எகிப்தில் அமைந்துள்ள ‘டிஸோசர்’ பிரமிடை விட ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன், குறிப்பிட்ட பிரமிடா னது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரமிடு குறித்த உறுதியான தகவல்களை கடந்த ஆண்டே தொகுத்துவிட்ட ஆய்வாளர்கள், அவற்றை மிகவும் ரகசியமாக பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது வெறும் கற்குவியலாக காட்சி தரும் இந்த பிரமிடின் தோற்றமும், இதுவரை உலகின் முதல் பிரமிடாகக் கருதப்பட்ட எகிப்தின் ‘டிஸோசர்’ பிரமிடு போலவே உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாய் கண்டுபிடித்துள்ள பிரமிடு பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இந்த பிரமிடானது 27 அடுக்குகளுடன் இருந்திருக்கலாம் என்று ஊகமாகக் கூறியுள்ளனர்.