செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான்

விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை | பாகிஸ்தான்

0 minutes read

பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார்.

அவரது தங்கை எர்ரம் மசூத். இவரும் விமானி ஆனார். இவரும் பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்சில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் எர்ரம் மசூத் பாகிஸ்தான் இன்டர் நே‌ஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போயிங் 777 ரக விமானம் ஓட்டும் அளவுக்கு பதவி உயர்வு பெற்றார்.

எனவே, அக்கா-தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர். இத்தகவலை பாகிஸ்தான் இன்டர்நே‌ஷனல் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தன்யால் ஹிலானி தெரிவித்தார்.

அக்காள்-தங்கை இருவரும் லாகூர்-கராச்சி-மான் செஸ்டர், நியூயார்க் மற்றும் லண்டனுக்கு விமானம் ஓட்டியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.