செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டேங்கர் லாரி மீது பஸ் மோதி 38 பேர் சாவு | ஆப்கானிஸ்தான்டேங்கர் லாரி மீது பஸ் மோதி 38 பேர் சாவு | ஆப்கானிஸ்தான்

டேங்கர் லாரி மீது பஸ் மோதி 38 பேர் சாவு | ஆப்கானிஸ்தான்டேங்கர் லாரி மீது பஸ் மோதி 38 பேர் சாவு | ஆப்கானிஸ்தான்

1 minutes read

ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தில் இருந்து தலைநகர் காபூலுக்கு நேற்று அதிகாலையில் பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 50–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ் ஜாபூல் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சிலும், லாரியிலும் தீப்பற்றி கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் 2 வாகனங்களும் தீயில் உருக்குலைந்து போயின.

இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 38 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அடையாளம் காணமுடியாத வகையில் எரிந்து கரிகட்டைகள் போல ஆயினர்.

மேலும் 20–க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் அதிகப்படியான சாலைகள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அடிக்கடி இது போன்ற கோர விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த மே மாதம் இதே போல் கஜினி மாகாணத்தில் பயணிகள் பஸ்சும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 73 பேர் பலியானது நினைவுகூரத்தக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.