செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | ஜார்ஜியாஇரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | ஜார்ஜியா

இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | ஜார்ஜியாஇரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து | ஜார்ஜியா

0 minutes read

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள காரோல்டானில் மேற்கு ஜார்ஜியா பிராந்திய விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம், தலைநகர் அட்லாண்டாவில் இருந்து சுமார் 45 மைல் தொலைவில் உள்ளது.

இங்கு ஒற்றை என்ஜின் கொண்ட இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. ஓடுபாதைக்கு மிக அருகாமையில் நடந்த இவ்விபத்தில் விமானங்களில் பயணித்த 3 பேரும் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானங்கள் ஓடு பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாகவும் இரு விமானங்களும் தரையிறங்க முயற்சித்த போது விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய விமானங்கள் டைமண்ட் ஏர்கிராப்ட் டிஏ20சி1 மற்றும் பீச் எப்33ஏ ரகத்தை சேர்ந்தவை என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.