செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 15 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மெக்காவில் குவிந்தனர்15 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மெக்காவில் குவிந்தனர்

15 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மெக்காவில் குவிந்தனர்15 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மெக்காவில் குவிந்தனர்

1 minutes read

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா உள்ளது. அங்கு ஆண்டு தோறும் 5 நாட்கள் புனித ஹஜ் யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை நேற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த 1 லட்சம் பேரும் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். ஏராளமானவர்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மெக்கா, மதீனாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீப காலமாக ஹஜ் யாத்திரையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

புனித யாத்திரையில் பங்கேற்றுள்ள பயணிகள் வசதிக்காக மெக்கா, மதீனா நகரங்களில் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. யாத்திரை செல்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கி சிகிச்சை பெற 158 இடங்களில் தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 25 ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர 100 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ வசதியுடன் கூடிய 51 பஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

அவசரகால உதவிக்காக 17 ஆயிரம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். யாத்திரையின் இறுதி நாளன்று யாத்திரீகர்களுக்கு வினியோகிக்க 15 லட்சம் கன்டெய்னர்களில் மெக்காவின் ‘ஜம் ஜம்’ புனித நீர் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். அவர்களில் பலர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.

சவுதி அரேபிய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான் இந்த ஆண்டு தனது நாட்டை சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.