செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்

2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல லிபிய நாட்டில் தயார் | ஐ.நா. தகவல்

1 minutes read

பதற்றமான சூழல் நிலவி வரும் சிரியா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், லிபிய நாட்டில் உள்ள 2,35,000 அகதிகள் இத்தாலிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஆதரவு மிஷனின் தூதர் மார்டின் கெப்ளர் பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பாதுகாப்பை உறுதி செய்தல் என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. ஒருங்கிணைந்த, வலிமையான ராணுவம் நம்மிடம் இருந்தால், தீவிரவாத அச்சுறுத்தல், மனித கடத்தல் ஆகிய சவால்களை சமாளிக்கலாம்.

லிபியா விவகாரத்தில் பேச்சுவார்த்தை, நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமை தேவையாக உள்ளது. ஜெனரல் ஹாப்தரை தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரை சந்திப்பதற்கு தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

லிபிய நாட்டில் உள்ள ஆயிரத்து 770 கிலோமீட்டர் கடற்கரை பரப்பளவு, அகதிகள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிப்பதற்கு மிகவும் ஏதுவானதாக இருந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.