செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்

இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்இரவு முழுவதும் கழிவறையில் தவறி விழுந்த செல்போனை எடுக்கும் முயற்சியில் கை சிக்கி அவதிபட்ட வாலிபர்

0 minutes read

சீனாவின் குவாங்டாங் மாகாணம்  ஹூயூசூ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.  மாலை நேரத்தில் மது அருந்திய அவர் போதையில் கழிவறைக்கு சென்று உள்ளார். கழிவறையில் வைத்து தனது மொபைல் போனில் பேசிகொண்டு இருந்து உள்ளார். அப்போது கைதவறி மொபைல் போன் கழிவறை ஓட்டையில் விழுந்து உள்ளது. போதையில் இருந்த அவர் தனது மொபைல் போனை எடுக்க போராடி உள்ளார்.

தனது இடது கையை கழிவறை ஓட்டையில் விட்டு மொபைல் போனை எடுக்க முயற்சித்து உள்ளார். அவர் போதாத நேரம் கையும் அதில் மாட்டி கொண்டது. கையை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தும் நடக்கவில்லை இரவு முழுவது அவர் தனது கையை எடுக்க முயற்சி செய்து உள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால்  உதவி கோரி கதறி உள்ளார்.

அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து  கழிவறையை உடைத்து வாலிபரை மீட்டு உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.