சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐ.நா.சபையில் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மருந்து வகைகள் 18 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வசித்து வரும் மக்களுக்கு இந்த பொருட்களை பகிர்ந்து அளிப்பதற்காக ஒரு கிடங்கில் நிவாரண பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வானில் பறந்துவந்த போர் விமானங்கள் ஐந்து ஏவுகணைகளை அந்த கிடங்கின்மீது வீசின. இந்த தாக்குதலில் நிவாரண பொருட்களை ஏற்றிவந்த லாரிகளும் தீக்கிரையாகின. கிட்டங்கி கட்டிடம் சேதம் அடைந்தது. செம்பிறை அமைப்பை சேர்ந்த 12 பேரும் பலியாகினர்.
ரஷியா அல்லது சிரியா நாட்டின் விமானப்படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உடனடியாக சிரியா ராணுவமும், ரஷியாவும் இணைந்து பதிலடி தந்ததில், 40 கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.