செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு ‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு

‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு ‘காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம்’ | பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு

1 minutes read

காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இல்லை என ஐ.நா. சபை கைவிரித்து விட்டது. இது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா. சபையின் பொதுச்சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசினார். எதிர்பார்த்ததுபோலவே அதில் அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா ஆயுத குவிப்பில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. அதை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.
தெற்கு ஆசியாவில் மோதல்தான் எங்கள் தலைவிதி என்றாகி விடக்கூடாது. இந்தியாவுடன் அமைதியை பராமரிக்கத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முன்நிபந்தனைகளை இந்தியா விதிக்கிறது.
இரு நாடுகளின் நலனையொட்டித்தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். எங்களுடனான கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு அவர்கள் அத்தியாவசியம் தேவை. குறிப்பாக காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். போர் பதற்றம் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும்.
தெற்காசியாவில் நிலவுகிற பதற்றத்தை சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் தெற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்த முடியாது.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர் இந்தியாவுக்கு எதிரான ஆவணங்களின் தொகுப்பை வழங்கினார்.
ஆனால் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்ற நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை பான் கி மூன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
அவர்களிடையேயான சந்திப்புக்கு பின்னர் பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பாகிஸ்தான், இந்தியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித்தான் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி கூறினார்” என குறிப்பிட்டார்.
காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்பதை ஐ.நா. சபை இதன்மூலம் தெளிவுபடுத்தி விட்டது.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச விவகாரம் ஆக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் மேற்கொண்ட முயற்சிக்கு இது பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.