செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு 52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு

52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு 52 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது | கொலம்பியா அரசு – கிளர்ச்சியாளர்கள் உடன்பாடு

1 minutes read

கொலம்பியா நாட்டில் அரசு படைகளுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964–ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதில் ஏறத்தாழ 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 45 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள். 69 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த நிலையில் கொலம்பியா அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கார்ட்டாகெனா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதில் கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், பார்க் கிளர்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் டிமோசெங்கோ ஜிமெனஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.  இதன்மூலம் 52 ஆண்டு கால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, வாடிகன் வெளியுறவு மந்திரி பீட்ரோ பரோலின், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.  இதில் பங்கேற்ற 2,500 பேர் சமாதான அடையாளமாய் வெள்ளை நிற உடை அணிந்திருந்தனர்.
இதையடுத்து ஐரோப்பிய யூனியன், தனது பயங்கரவாத குழுக்கள் பட்டியலில் இருந்து பார்க் கிளர்ச்சியாளர்களை நீக்குவதற்கு முடிவு எடுத்துள்ளது. இதனால் அந்த அமைப்பினர் மீதான பொருளாதார தடை நீங்கும்.
இந்த உடன்படிக்கையின்படி பார்க் கிளர்ச்சியாளர்கள் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவார்கள், அதன் தலைவராக டிமோசெங்கோ ஜிமெனஸ் இருப்பார். இந்த உடன்பாட்டினை ‘கொலம்பியாவுக்கான புதிய விடியல்’ என அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, மகிழ்ச்சி வெளிப்படுத்தி உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.